ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய முயற்சி!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி அந்த நிறுவனங்கள் ஈட்ட வேண்டிய வருமானம் உள்ளிட்ட இலக்குகள் வழங்கப்பட உள்ளன.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கு மேற்படி நிறுவனங்கள் முறையாக செயற்படவில்லை எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் அரசாங்கத்தின் வருமானத்தை ஈட்டுவதில் இது தொடர்பான நிறுவனங்கள் பலவீனம் காட்டி வருவது அரசாங்கத்தினால் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் உள்ளுர் வருவாய் திணைக்களம் மிகவும் நலிவடைந்த நிறுவனமாக காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய, எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் வழங்கிய இலக்குகளை நோக்கி உரிய நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.