அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர், அஃப்ரீன் அக்தருக்கும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்று தாஜ்சமுத்திரா ஹோட்லில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் எம்.ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் ”சமகாலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெறுகின்ற நில ஆக்கிரமிப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றி அஃப்ரீன் என்னிடம் வினாக்களைத் தொடுத்திருந்தார்.
இதன்போது ஆக்கிரப்புச் செயற்பாடுகள் பல்வேறு விதமான வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றமையையை நான் அவருக்கு எடுத்துக் கூறினேன்.
அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்தும் சுட்டிக்காட்டினேன் ” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்காலப் செயற்பாடுகள் தொடர்பில் தான் விசேட கரிசனையைக் கொண்டிருந்ததாகவும், எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.