33 வருஷம் ஆகிவிட்டது . மிகவும் சந்தோஷமா இருக்கிறேன் .. ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி.ஜே. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 33 ஆண்டுகள் கழித்து தனது வழிகாட்டியுடன் நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், "33 ஆண்டுகளுக்கு பிறகு, எனது வழிகாட்டி ஸ்ரீ அமிதாப் பச்சனுடன், லைக்கா தயாரிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது மனம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.