எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா- லியோ வெற்றி விழாவிற்கு அனுமதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பு நிறுவனம் கடிதம் கொடுத்தது.
இந்நிலையில், 'லியோ' பத்தின் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்றை பெரியமேடு காவல்துறையினர் வழங்கியுள்ளனர். மேலும், பேருந்தில் ரசிகர்கள் விளையாட்டரங்கிற்கு வர தடை மற்றும் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.








