Breaking News

கருத்து வேற்றுமைகளை தீர்க்க இலங்கையில் சீன நிறுவனத்தை நிறுவ அனுமதி!

 


அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே ஏற்படுகின்ற கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் மத்தியஸ்த்திற்கான சர்வதேச நிறுவனத்தைத் தாபிப்பதற்காக சீன அரசு முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, சீன அரசு ஆர்வம் காட்டுகின்ற நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், குறித்த ஆரம்ப கலந்துரையாடல்கள் சிலவற்றில் இலங்கையும் பங்குபற்றியுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத்தைத் ஸ்தாபிப்பதற்கான ஒருங்கிணைந்த அறிக்கை 2022 ஜீலை மாதம் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை சீனா உள்ளிட்ட 10 நாடுகள் வரையில் அங்கீகரித்துள்ளன.

குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை இலங்கையில் அங்கீகரிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களிடம் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருங்கிணைந்த அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம் தற்போது இலங்கை கொண்டுள்ள சர்வதேசப் பொறுப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்தியஸ்த்திற்கான சர்வதேச நிறுவனத்தைத் ஸ்தாபிப்பதற்கான ஒருங்கிணைந்த அறிக்கையை அங்கீகரிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.