Breaking News

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய செயலி!

 


இலங்கையில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி (ஆப்) மூலம் இது செய்யப்பட உள்ளது.

இந்த புதிய அம்சம் 'RDMNS.LK  Live Train Alerts Mobile' செயலி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த வசதி  நவம்பர் 23-ம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வௌியிடப்பட்டுள்ளது.
   

இந்த பயன்பாடு,

ரயில் பெட்டிகளில் நுழைந்து பார்க்கும் திறன்
இருக்கை முன்பதிவு கட்டணம்
ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள்
இருக்கைகளின் வகைகள்
இருக்கை எண்
ஒவ்வொரு முறையிலும் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான ஆலோசனைகள்
காணொளி காட்சிகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரயில் கால அட்டவணை

ஆகிய தகவல்களை சிங்களம், ஆங்கிலம் போன்ற  மொழிகளில் இலகுவாகக் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இது தவிர, RDMNS LK கைப்பேசி செயலியானது ரயில் இருப்பிடம், ரயில் தாமதம் மற்றும் அதற்கேற்ப அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்ல எதிர்பார்க்கப்படும் நேரங்கள், நேரலைச் செய்திகள் உள்ளிட்ட பல ரயில் தொடர்பான சேவைகளைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.