கயிற்றில் நடந்தவாறு கத்திகளால் வித்தை காட்டி உலக சாதனை படைத்த சர்க்கஸ் கலைஞர்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்தவர் எட்கர் யுட்கேவிச். சர்க்கஸ் கலைஞரான இவர் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட தூரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.
இவ்வாறு வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.