கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை
விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து 14 வருடம் கடந்த நிலையிலும் மாவீரர் துயிலுமில்லத்துக்குரிய காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்படவில்லை.
மாவீரர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீPதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேலமாலிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.