சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 49 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி 50 சதங்கள் அடித்து அதை முறியடித்துள்ளார்.
அத்தோடு உலகக் கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன் 2003 இல் 673 ஓட்டங்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ண தொடரில் 674 ஓட்டங்களை பெற்றுள்ளார்.