பிக்பாஸ் விசித்ராவை பாலியல் சீண்டல் செய்த நடிகர் யார் ??
தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விசித்ரா. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸ் 7-வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 51-வது எபிசோட்டில் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்வில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது நடிகை விசித்ரா, "நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ என் பெயர் கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்கிறாயா? என் அறைக்கு வா என்று அழைத்தார். அன்று இரவு என் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அப்போது இருந்து பல்வேறு சிக்கல்கள் கொடுத்தார்கள்.
மாலையில் பலர் குடித்துவிட்டு அறையை வந்து தட்டுவார்கள். அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என வருத்தத்தில் இருந்தேன். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்தவர் தான் அறையை மாற்ற உதவி செய்தார். அந்த மேனேஜர் தான் இப்போது எனது கணவர்" என்று கூறினார்.
மேலும், 50-க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒரு சண்டைக் காட்சி எடுக்கும் போது தன்னை ஒரு துணை நடிகர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதை கண்டு பிடித்து ஸ்டண்ட் மாஸ்டர் இடம் கூறிய போது அவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும் விசித்ரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'பலேவடிவி பாசு' (Bhalevadivi Basu) என்ற திரைப்படத்தில் நடிந்ததாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.