Breaking News

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

 


பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு ‘ஆயுபோவன் 2024’ எனும் தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இதன்போது உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்ததோடு அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .