Breaking News

முல்லைத்தீவில் 100% சித்தியடைந்து சாதனை நிலைநாட்டிய மு . கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை!

 


முல்லைதீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டுசுட்டான் மாங்குளம் பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற  கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது 2022  ஆண்டுக்கான க.பொ .த சாதாரணதர பரீட்சசையில் நூறு சதவிகித சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளது. அது மட்டுமன்றி மாணவர்கள்  சிறப்பான பெறுபேறுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கரிப்பட்டமுறிப்பு அரசினல்  தமிழ் கலவன் பாடசாலையானது அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகின்ற ஒரு பாடசாலை ஆகும்.

இங்கு மாணவர்களுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே இங்கு கல்வி கற்றுவருகிறார்கள்.

இவ்வாறு யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த பாடசாலைக்கு மிகவும் நெருக்கடியான போக்குவரத்து சேவைகளுக்கு மத்தியில் வருகை வந்து அவர்களுக்கான கற்ப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே  2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றிய 10 மாணவர்களின் 10 மாணவர்களும் 100 வீத சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 அந்தவகையில் ,குகநேசன் யாழின்பன் 7A 2B, உதயந்தி கோபிதன் 6A 2C S, விக்கினேஸ்வரன் அபிராமி 5A 3B, தேவராஜ் வினோதா 5A 2B C, பத்மரஞ்சன் திருசாளினி 3A 3B 3C, செல்வராசா பவிது 3A 4B C S, தயானந்தசெல்வன் தனோஜா2A 2B 3C 2S, சுதாகரன் சுகந்தியா 2A 3B 3C S, பத்மரஞ்சன் மதுமிலன் 2A B 5C S, பத்மநாதன் நிருபா A 2B 4C 2S ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், தங்களுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்த பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்,

அத்துடன் மாணவர்கள் தாங்கள் உயர்தர கல்வியை கற்பதற்கு இங்கு பாடசாலை இல்லாமல் பல மைல் தூரங்களுக்கு அப்பாலுள்ள பாடசாலைகளுக்கே செல்ல வேண்டிய நிலை  இருப்பதாகவும் தமது பாடசாலையில் உயர்தர பிரிவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல  நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்குகின்ற இந்த பாடசாலைக்கும் கிராமத்துக்கும்  தங்கள் சாதனையை பெற்றுத்தந்த மாணவர்களை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.