இலங்கைக்கு மேலும் பல நிபந்தனைகளை விதித்த IMF!
இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக சர்வதேச நாணய நிதியம், மேலுமு் 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாம் தவணைக் கடன் தொகை வழங்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கத்திடம் 73 நிபந்தனைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2023ஆம் ஆண்டின் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய குறித்த 73 நிபந்தனைகளில் 60 நிபந்தனை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றியுள்ளது.
எஞ்சிய நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 8 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 5 நிபந்தனைகள் கடுமையான நிபந்தனைகள் என்பதால் அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு IMF இணக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








