பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் ? இணையத்தில் வெளியான தகவல்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 வெற்றியாளர் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்ததாக தெரிகிறது.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்ட் மூலம் வீட்டிற்குள் நுழைந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா தான் என்றும் கூறப்படுகிறது