Breaking News

குறைக்கப்படுமா மின் கட்டணம்?

 


“மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக” மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர   தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது ”மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு எதிர்காலத்தில் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவோ அல்லது நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை மீறும் வகையிலோ செயற்படும் ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.