Breaking News

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

 


சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.

மேலும் ஒரு வாரத்திற்குள் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.