Breaking News

மின் கட்டண திருத்த முன்மொழிவு பொது பண்பாடு ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

 


புதிய மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் நேற்று கையளித்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளதுடன் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சார சபையால் ஈட்டப்படும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதாக மின்சார சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த கடந்த 21 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

அத்தோடு, வீடு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை நேற்ற பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.