Breaking News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு!

 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி வேண்டி எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது. எங்களுடைய பிள்ளைகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்காது சர்வதேசத்திடம் நீதியை வேண்டி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.