வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விடுதலையான பூசகர் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி 5நாட்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.