Breaking News

அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான புதிய பரிந்துரைகள்!

 


நுகர்வோரை பாதுகாப்பதில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பங்களிப்பு தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வில், அந்த அதிகாரசபையின் பல பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது.

தணிக்கைக் காலத்திற்கு அமைய 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலக்கு வைக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களை விட உண்மையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 74% இல் இருந்து 56% ஆகக் குறைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சில புதிய பரிந்துரைகளை வழங்க கணக்காய்வாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

1.இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக, அதிகபட்ச சில்லறை விலை சான்றிதழை வழங்க தேவையான பொருட்களின் வகைகள் கண்டறியப்பட்டு, அந்த பொருட்களை உள்ளடக்கிய புதிய உத்தரவுகளை விதிக்க வேண்டும்.

2.அதிகபட்ச சில்லறை விலைச் சான்றிதழைப் பெறுவதற்கு அதிகாரசபைக்கு தகவல்களைச் சமர்ப்பிக்காத இறக்குமதியாளர்களுக்கு எதிராக சந்தைச் சோதனைகளை செய்தல் மற்றும் சட்ட நடவடிக்கையை எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்.

3.இறக்குமதியாளர்களால் அதிகபட்ச சில்லறை விலைச் சான்றிதழைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கும் விலைகளை அங்கீகரிக்க முன்னர் அந்த விலை தொடர்பில் பௌதீக சோதனை செய்தல் கட்டாயமாகும்.

4.மாதிரிகள் சோதனையின் போது நுகர்வுக்குத் தகுதியற்றவை அல்லது பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் இல்லை என உறுதிசெய்யப்பட்ட மாதிரிகள் தொடர்பாக அந்த வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யாமல் இருத்தல்.