Breaking News

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதாரத் தொழிற்சங்க கூட்டணி!

 


நாடளாவிய ரீதியில் மீண்டுமொரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து தங்களது கோரிக்கை தொடர்பிலான அறிக்கை சுகாதார அமைச்சினால் நிதியமைச்சிடம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையினை தற்காலிகமாக நிறத்தி, நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சிற்கு காலஅவகாசம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.