இலங்கை தமிழ் அரசுக் கட்சி குறித்து வெளியான முக்கியத் தகவல்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் ச.குகதாசன் ஆகியோருக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முன்நிலையாகியிருந்தார்.
இதன்போது வழக்காளியின் நிலைப்பாட்டினை தெரிவிக்குமாறும் வழக்கை மீளப்பெறுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தாக கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.