`96 இயக்குனருடன் இணையும் கார்த்தி வெளியான ஃபர்ஸ்ட் லுக்!
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் ஒரு தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.
அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்தது. படத்தின் அடுத்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளனர், இது குறித்து போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்ட கார்த்தி காலை ஆட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும்படி காட்சிகள் அமைந்துள்ளது.