ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக .விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கீர்த்தி உடவத்த ஆகியோர் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி குறித்த தடையுத்தரவு ஜுன் மாதம் 03ம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .