சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டேவின் வோர்னர்!
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவின் வோர்னர் அறிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதுடன் அவுஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
பங்களாதேஷ் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்ற நிலையில், இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதனால், செயின்ட் லூசியாவில் நேற்று இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியே டேவிட் வார்னரின் இறுதிப் போட்டியாக மாறியது.
எவ்வாறாயினும், அவசியம் ஏற்பட்டால் சாம்பியன் தொடரில் விளையாடுவேன் என டேவிட் வார்னர் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
37 வயதான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் 18,995 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.