Breaking News

தபால் முத்திரை விலை அதிகரிப்பு?

 


தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர்  அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இதற்காக திரைசேறியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

2022 வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் குறைந்தபட்ச விலை தற்போது 50 ரூபாயாக உள்ளது.

தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அனுஷ பல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.