இந்திய நிதி அமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்!
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்திய நிதியமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை உயர் ஸ்தானிகர் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.