இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. .
இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் முதல் புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 35-45 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 25-35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுவதுடன் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.