Breaking News

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைப்பு!

 


பஸ் கட்டணங்களை  குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து  ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி  இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 5.07 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் பஸ் கட்டணம் 2 ரூபாவினால்  குறைக்கப்படவுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணமாக 28ரூபா அறவிடப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.