தெளிவுபடுத்தல் அறிக்கை - அவுஸ்திரேலியா,ஜேர்மன்,சுவிஸ்
தேசியத்தலைவருக்கான வீரவணக்கம் என்ற பெயரில் சுவிஸ், அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மற்றும் பேர்த் ஆகிய இடங்களில் சிலரால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு தொடர்பில், அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்களும் கலந்துரையாடியதன் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வு சம்பந்தப்பட்டவர்களுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் அடிப்படையிலும், அதன் தொடர்ச்சியாக, அனைத்து நாடுகளிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இது தொடர்பில் எடுத்த ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலும் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழத் தேசியக்கடமைகளில் இணைந்து நிற்பது போல, தேசியத்தலைவர் விடயத்திலும் அனைவரும் ஓரணியில் உறுதியோடு பயணிக்கவேண்டும். அதுவே அவருக்கான உண்மையான மதிப்பளிப்பாக இருக்கும். அதற்கான பணிகளில் அனைவரும் எம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.
தெளிவுபடுத்தல் அறிக்கை - அவுஸ்திரேலியா
தெளிவுபடுத்தல் அறிக்கை - ஜேர்மனி
தெளிவுபடுத்தல் அறிக்கை - சுவிஸ்