Breaking News

ஓமந்தையில் தடுத்துவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை


கொழும்பில் இடம்பெறவிருந்த பயிற்சிநெறியில்
பங்கேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்களை ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்துவைத்திருந்த பொலிஸார் 6 மணிநேரத்தின் பின் அவர்களை விடுதலை செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தின் சாரதியை பொலிஸார் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர் என விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கூறினர்.


குறித்த ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனத்தில் கஞ்சா இருந்ததாகக் கூறியே தம்மைப் பொலிஸார் தடுத்து வைத்திருந்தனர் என்றும் விடுதலை செய்யப்பட்டவுடன் பொலிஸார் தங்களை பொலிஸ் நிலைய வளாகத்துக்கு வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தினர் என்றும் மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேசமயம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள் சாரதியை விடுவிக்க வேண்டும் எனக் கோரி ஏ-9 வீதியை வழிமறித்துப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் பயிற்சிநெறியில் பங்குபற்றாது தற்போது யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.