வன்முறைக்காக கராத்தே கற்றுவரும் பொதுபலசேனா - THAMILKINGDOM வன்முறைக்காக கராத்தே கற்றுவரும் பொதுபலசேனா - THAMILKINGDOM
 • Latest News

  வன்முறைக்காக கராத்தே கற்றுவரும் பொதுபலசேனா

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

  பொதுபல சேனா அமைப்பின்தலைவர் கலகொட
  அத்தே ஞானசார தேரர் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

  கொழும்பு ரெலிகிராவ் இணையத்தளம் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ஞானசார தேரர் கூறியுள்ளார். உடலின் மேல் பகுதியில் காவி அணியாத பிக்கு ஒருவர் மற்றுமொரு பிக்குவிற்கு கராத்தே கற்றுக்கொடுப்பது போன்று இந்த புகைப்படம் அமைந்துள்ளது. 

  முகம் தெரியாத வகையில் இந்த புகைப்படத்தில் உள்ள பிக்கு காணப்பட்டாலும் தோற்றத்தில் அது ஞானசார தேரர் போன்றே உள்ளது. எனினும் அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல எனவும் அதன் உண்மை தன்மை பற்றி தனக்கு தெரியாது எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

  அந்த புகைப்படத்தை தான் பார்த்ததும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி எந்த பிரச்சினையுமில்லை எனவும் படத்தில் இருப்பது ஞானசார தேரரே என புகைப்படத்தை வெளியிட்ட இணையத்தளத்தின் ஆசிரியர் கூறியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வன்முறைக்காக கராத்தே கற்றுவரும் பொதுபலசேனா Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top