ஜனாதிபதிக்கு தீடீர் சுகயீனம் அவசரமாக வெளிநாடு சென்றார் - THAMILKINGDOM ஜனாதிபதிக்கு தீடீர் சுகயீனம் அவசரமாக வெளிநாடு சென்றார் - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதிக்கு தீடீர் சுகயீனம் அவசரமாக வெளிநாடு சென்றார்

  சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச திடீர்
  சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

   எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர். நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

  அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக பேணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வழமையாக அவரின் பதிவுகளை இட்டுவரும் அவரது முகநூலில் மக்களை செய்தி சென்றடையாமல் தடுப்பதற்காக ஜனாதிபதி நாட்டில் உள்ளதுபோல கடந்தமாதத்தில் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வுகளை செய்திகளாக வெளியிட்டு வருகின்றது அரச தரப்பு.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஜனாதிபதிக்கு தீடீர் சுகயீனம் அவசரமாக வெளிநாடு சென்றார் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top