3/2 பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு - THAMILKINGDOM 3/2 பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு - THAMILKINGDOM
 • Latest News

  3/2 பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 3/2  எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. 


  நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட உள்ளடங்கலாக 150 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது.

   இதன் மூலம் 3/2 பெரும்பான்மை என்ற இலக்கை அடைவதற்கு ஆகக்குறைந்தளவில் இருக்க வேண்டிய 151 எனும் எண்ணிக்கையை அடைவதற்கு இன்று முதல் அரசு தள்ளப்பட்டுள்ளது. பிரதியமைச்சர்களாக இருந்த திகாம்பரம் மற்றும் இராதகிருஷ்னன் ஆகியோர் இன்று அரசைவிட்டு வெளியேறியுள்ளதை அடுத்தே 150 என்ற பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. 

  ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து இன்று வரை ஆளும் தரப்பில் அங்கம் வகித்த மற்றும் பங்காளிக்கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் அரசை விட்டு வெளியேறினர். அத்துடன் அஸ்வர் எம்.பி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை அடுத்தும் அதற்கு பதிலாக இதுவரை நாடாளுமன்றத்தில் எவரும் எம்பியாக சத்தியப்பிரமானம் செய்யாததாலும் இந்த நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

  இதன் மூலம் அரசுக்கு நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 150 எனும் எண்ணிக்கை, நாளை மறுதினம் அமீர் அலி எம்பியாக சத்தியப்பிரமானம் செய்யும் பட்சத்தில் அரசு மீண்டும் பெரும்பான்மைக்கு ஆகக்குறைந்தளவில் தேவையான 151 என்ற இலக்கை எட்ட வாய்ப்புக்கள் உள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: 3/2 பெரும்பான்மையை இழந்தது மகிந்த அரசு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top