ஜனாதிபதி இன்று விசேட உரை
இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டி, எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்பட்டுள்ளார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு சில மணிநேரத்தில் அஞ்சலி செலுத்துவார்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தலதா மாளிகையைச் சென்றடைவார். அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு கண்டியிலுள்ள எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்றைய தினம் சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்பட்டுள்ள ஜனாதிபதியை காண வீதிமுழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.








