Breaking News

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.



ஜொஹனஸ்பேர்க் (Johannesburg) மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 231 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் பெப் டு ப்ளஸ்சி (Faf du Plessis) 119 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 236 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 90 ஓட்டகளை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும் கெயில் தெரிவானார்.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது