கள்ள வாக்குப் போட்டால் தலையில் சுடவும் - மஹிந்த தேசப்பிரிய
வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது. கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்த பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவையானது அவசியமான அதிகாரமேயாகும்.
கள்ளவோட்டு போடுவதற்கு வருகின்றவர்களின் முழங்காலுக்கு கீழ் சுடவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின் தலையில் சுட வேண்டும் என தெரிவித்தார்.








