காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில் - THAMILKINGDOM காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில் - THAMILKINGDOM
 • Latest News

  காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில்

  காணாமல் போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் திருகோணமலை மாவட்­டத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்­ப­மாகவுள்ளன. 

  நான்கு நாட்கள் நடக்கவுள்ள இந்த அமர்வுகளில், சாட்சியமளிக்க விண்ணப்பிக்காதவர்களும் வந்து சாட்சியமளிக்க முடியுமென ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் தீபம் இணையத்தளத்திற்கு தகவல் தந்துள்ளார்.

  திருகோணமலை மாவட்டத்திலிருந்து 205 பேர் விண்­ணப்­பித்துள்ளனர். எனினும், மேல­தி­க­மாக பாதிக்­கப்­பட்ட உற­வி­னர்கள் தமது சாட்­சி­யங்­களை குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் பிரி­விலும் திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­ல­கத்­திலும் நடை­பெ­ற­வுள்ள ஆணைக்­கு­ழுவின் போது நேர­டி­யாக வந்து சாட்­சியமளிக்க முடி­யு­மென அவ்­வ­தி­காரி தெரி­வித்தார்.

  குச்­ச­வெளி பிர­தேச செய­ல­கத்தில் இன்று சனிக்­கி­ழ­மையும் நாளை ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்கள் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து 112 பேர் விண்­ணப்­பித்­துள்­ளனர் என்றும் இவர்கள் தென்­ன­ம­ர­வடி, திரியாய், புல்­மோட்டை, சல்லி, நிலா­வெளி, குச்­ச­வெளி, பெரி­ய­குளம் ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள்.

  இதே­வேளை, எதிர்­வரும் மார்ச் மாதம் 2ஆம் 3ஆம் திக­தி­களில் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள குச்­ச­வெளி தவிர்ந்த 10 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்கள் சாட்­சி­ய­ம­ளிப்­பார்கள். இப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து 93 பேரே விண்­ணப்­பித்­துள்­ளனர் எனவும் இதே­வேளை தமது உற­வுகள் காணாமல் போனது சம்­பந்­த­மாக சாட்­சியம் அளிக்க விரும்­பு­கின்­ற­வர்கள் நேர­டி­யாக வந்து சாட்­சி­ய­ம­ளிக்க முடி­யு­மெ­னவும் தெரிவிக்கப்படுகிறது.

  மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினர் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணை களை தொடர்ந்து 4 நாட்கள் நடத்தவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று திருகோணமலையில் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top