Breaking News

சீனாவுடன் பேச்சு நடத்தாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டோம்! மங்கள

சீனா அரசாங்கத்தின் முதலீடுகளை உள்வாங்குவதற்காக இலங்கையின் கதவு என்றும் திறந்து வைக்கப் பட்டிருக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், சீனப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை பீஜிங்கில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் மங்கள இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள,

சீனாவின் முதலீடுகளுக்கு இலங்கை  பாதுகாப்புத் தளமாகவே காணப்படும். கொழும்பில் அமைக்கப்பட்டுவரும் போர்ட்சிற்றி வேலைத்திட்டம் தொடர்பாக நேரடியாக இதன்போது கலந்துரையாடவில்லை. சீனாவின் முதலீடுகளை மாத்திரமே இலங்கை கவனிக்கும் என்று கூற முடியாது.

சீனாவுடன் பேச்சு நடத்தப்படாமல் சீனாவின் வேலைத்திட்டங்கள் குறித்து எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது. சீன முதலீடுகள் குறித்த இறுதி தீர்மானங்கள் எடுக்கும் முன்னர் சீன அரசாங்கத்துடன் அதுகுறித்து பேச்சு நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.