Breaking News

எதிர்க்கட்சி விவகாரம்! கூட்டமைப்பை தோற்கடிக்கத் தயாராகும் டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற தயாரானால், அதனை தோற்கடிக்க அணிதிரளப் போவதாக முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்குமாயின் அதனை தடுக்க ஈபிடிபி நடவடிக்கை எடுக்கும்.

1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கத்திற்கு கிடைத்ததாகவும், அதன் பிரதிபலன் 2009 மே 19ம் திகதி நந்திக்கடல் களப்பில் முடிவடைந்தது எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இதனால், வடக்கில் மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படுவதை தடுக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கக் கூடாது எனவும் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.