Breaking News

மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம்! அமைச்சர் சம்பிக்க

சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் முட்­டாள்­க­ளாக செயற்­படக்கூடாது எனவும் அவர் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறு­கையில்,

கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாத யுத்­தத்தை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டது, அதேபோல் சர்­வ­தேச அழுத்­தங்­களை எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அதேபோல் சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் கடும்­போக்கு அர­சி­ய­லுக்கும் நாடு முகம் கொடுத்­தது. வெறு­மனே யுத்­தத்தை வெற்­றி­கொண்டு நாட்டை ஆயுத போராட்­டத்தில் விடு­வித்­த­தாக கூறிக்­கொண்டு மக்­களை ஏமாற்­றிய மஹிந்த கூட்­டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்­று­விட்­டது.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும் என்­பதில் நாமும் ஆவ­லோடு இருந்தோம். யுத்தம் நடத்­தப்­ப­டாது இடை­ந­டுவே புலி­க­ளுக்கு ஆத­ர­வாக அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்த போது ஜாதிக ஹெல உரு­மை­யவே தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டது. நாம் கொடுத்த அழுத்­தத்தின் கார­ணத்­தினால் தான் அர­சாங்கம் தொடர்ந்து யுத்­தத்தை முன்­னெ­டுத்­தது.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மாக இருந்தும் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்கள் தமது அதி­கார ஆசையில் சர்­வா­தி­கார ஆட்­சியை கடு­மை­யாக்­கி­ய­மையும் நாட்டில் அதி­காரக் குவிப்பை மேற்­கொண்­ட­மை­யுமே நாம் மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற பிர­தா­னமான கார­ண­மாக அமைந்­தது.

கடந்த ஜன­வரி மாதம் இந்த நாட்டில் மிக முக்­கிய மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலமும் சர்­வா­தி­கா­ர­மாக பய­ணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சிகள் பிர­தான கட்­சி­க­ளாக ஒன்­றி­ணைத்து ஏனைய தமிழ்,சிங்­கள, முஸ்லிம் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து இந்த ஆட்­சியை அமைத்­துள்ளோம்.

இந்த ஆட்­சியில் நாடு சரி­யான பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. ஆகவே இப்­போது நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த­லுடன் மீண்டும் பல கட்சி அர­சியல் முறைமை உரு­வாக்கும் சர்­வா­தி­கா­ரப்­போக்கு இல்­லாத, அனைத்துக் கட்­சி­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்கும் வகையில் சரி­யா­ன­தொரு அர­சியல் முறைமை உரு­வாக வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

கேள்வி :- மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது சாத்­தி­ய­மா­னதா ? ஏற்­றுக்­கொள்ளக் கூடி­யதா?

பதில்: மஹிந்­தவை மீண்டும் பிர­த­ம­ராக்க ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி முயற்­சிக்க நினைப்­பது மிகவும் முட்டாள் தன­மா­ன­தொரு செயற்­பா­டாகும். இத்­தனை காலமும் நாம் போரா­டி­யதும் சர்­வா­தி­கார குடும்ப அர­சி­யலை அடி­யோடு ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வே­யாகும். அவ்­வா­றான நிலையில் மீண்டும் மஹிந்­தவை ஆத­ரித்­துக்­கொண்டு வர நினைப்­பது ஏன்? மீண்டும் மஹிந்த கூட்­ட­ணி­யிடம் நாட்டை ஒப்­ப­டைத்தால் நாடு அழி­வது உறுதி. அதேபோல் மஹிந்­தவால் இனிமேல் அர­சி­யலில் கால்­தடம் பதிக்க முடி­யாது. அவரால் மீண்டும் மக்­களின் ஆத­ரவை பெற­மு­டி­யாது. மஹிந்த மற்றும் அவ­ரது குடும்ப அர­சியல் வாதி­க­ளைப்­பற்றி மக்கள் நன்­றாக அறிந்­து­கொண்­டுள்ளார். அவ்வாறான நிலையில் மக்கள் மீண்டும் மஹிந்தவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி :- பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமைய தனித்து போட்டியிடுமா?

பதில் -பொதுத் தேர்தலில் நாம் தனித்து களமிறங்குவதா அல்லது கூட்டணியில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் இல்லை. இவ்வார இறுதியில் நாம் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்போம்.