இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு!

  இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன் கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார். 

  முன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார். 

  இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top