Breaking News

பிரதமர் பதவிக்கு மகிந்த களமிறங்கும் சாத்தியம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 எனினும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலா அல்லது வேறு கட்சியிலா போட்டியிடுவார் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு அவர் போட்டியிடுவாராயின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை, தனது தந்தைக்கு மக்களின் ஆதரவு பாரியளவில் இருப்பதனால் பிரதமர் பதவிக்கு போட்டியிட களமிறங்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச அழைப்புவிடுத்துள்ளார். அத்துடன் அவரது ஆதரவாளர்களும் மகிந்தவை தேர்தலில் களம் இறக்குவதற்கே மிகுந்த உத்வேகத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.