Breaking News

மஹிந்தவின் உடலை விகாரைகள் தோறும் எடுத்துச் சென்று அரசியல் செய்கின்றனர்!

மஹிந்த ராஜபக்ஷ வந்தாலும் வராவிட்டாலும் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்வது உறுதி என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

தோல்வியுற்ற தலைவரான மஹிந்த ராஜபக்ஷவின் உடல் தற்போது விகாரைகள் தோறும் எடுத்துச் செல்லப்பட்டு அரசியல் செய்யப்படுவதாக சுஜீவ சேனசிங்க கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். 

கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகளின் போது பலமான வெளிநாடுகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அந்த பணத்தை மீளப் பெற அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மற்றும் நீதிமன்றம் எடுக்கும் சில தீர்மானங்கள் குறித்து தமக்கும் அதிருப்தி உள்ளதாகவும் இத்துறைகளில் உள்ள சில கையாட்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.