பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி - THAMILKINGDOM பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி - THAMILKINGDOM

 • Latest News

  பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது சரியானது என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

  ராஜீவ் காந்தி கொலையை நாம் யாரும் நியாயப்படுத்துபவர்கள் அல்ல. இவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என பலமுறை அறிக்கை விடுத்துள்ளேன். இனியும் தாமதிக்காமல் சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு மூவரையும் விடுதலை செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.. இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் – கருணாநிதி Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top