‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’ - THAMILKINGDOM ‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’ - THAMILKINGDOM

  • Latest News

    ‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’

    ஜனாதிபதி மைத்திரிக்கு அருகில் இருக்கும் மகளை மீட்டுத் தரமுடியாதவர்கள் போலி வாக்குறு திகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக காணமல் போனவர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

    வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்களை கண்டறிந்து தருமாறுகோரி நேற்று யாழ்.நல்லூர் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

    காலை 11 மணியளவில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

    ‘தற்போதைய ஜனாதிபதி அருகில் படத்தில் இருக்கும் எனது மகள் எங்கே’

    ‘எனது அப்பாவை மீட்டுத்தாருங்கள் எனக்கும் எனது அப்பா வேண்டும்’

    ‘தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம்’

    ‘எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா’

    ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே’

    போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘மைத்திரி அருகிலுள்ள யுவதியை மீட்டுத் தரமுடியாத வாக்குப் பிச்சைக்காரர்கள்’ Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top