‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM ‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம் - THAMILKINGDOM

 • Latest News

  ‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம்

  ”சிங்கள கொடி”க்கு அபகீர்த்தி ஏற்படுத்திய கூறி கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள சிரச, சக்தி ஊடகங்களின் மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபல சேனா இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

  ”சிங்களவர்களின் கொடியை” இனவாதக் கொடியெனக் கூறி, சிரச ஊடக வலையமைப்பு செய்தி வெளியிட்டு, இனவாத ஊடக பரப்புரையை செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

  ”தமது கட்சி ஆட்சிக்கு வருமாயின் குறித்த சிங்களக் கொடியை நாட்டின் தேசியக் கொடியாக பிரகடனப்படுத்துவோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குறித்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ‘சிங்கள கொடி’க்கு அபகீர்த்தி – மகாராஜா நிறுவனத்திற்கு எதிரில் பொதுபலசேனா ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top