தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு - THAMILKINGDOM தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு

  தமிழ் மக்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் மீண்டும் உதாசீனம் செய்து அமெரிக்கா தனது தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

  ஜெனிவாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

  இனவழிப்பு மற்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பன இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்படாத நிலையில் எம்மை ஏமாற்றும் காரியத்திற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  இலங்கையில் பிரச்சனை ஒன்று எப்போதுமே நீடிக்க வேண்டும் என்பதை சர்வதேசம் விரும்புவதாகவும் குறிப்பாக அமெரிக்காவின் நோக்கமாக அது இருந்துவருவதாகவும் அனந்தி சசிதரன் விமர்சித்துள்ளார்.

  இந்த விடயத்திற்காகவே தமது நாடுசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்காக தமிழ் மக்களை அமெரிக்கா ஏமாற்றிவருகின்றமையே உண்மையான வியடம் என அவர் தெரிவித்தார்.தமிழ் மக்கள் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன், தமக்கான நீதி கிடைப்பதற்கான முன்னெடுப்பு சர்வதேசத்திடமிருந்தே கிடைக்க வேண்டுமென விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  எனினும் தமிழ் மக்களை சர்வதேசம் ஏமாற்றியுள்ளாகவும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்திர சசிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top