புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - THAMILKINGDOM புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - THAMILKINGDOM
 • Latest News

  புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

  உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. 

  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவரும் புலிகளின் உறுப் பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் குறித்து கட்சியின் சட்டத் தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மனித படுகொலைகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சமாதானத்தை சீர்குலைத்தமை, சிறுவர் போராளிகளை படையில் இணைத்தமை, அப்பாவிப்பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன் படுத்தியமை, அரசியல்வாதிகள் பொதுமக்களைக் குண்டு வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொலை செய்தமை உள்ளிட்ட பல் வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப் படையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் முதல் சாதாரண முன்னாள் போராளிகள் வரை அனைவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை அரச படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஜாதிக யஹல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.இதேவேளை, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குச் செவ்வி வழங்கியுள்ள ஜாதிக யஹல உறுமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க,

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிரிழந்து விட்டார்கள். அவர்களக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணை நடத்த முடியாது எனச் சிலர் கூறுகின்றனர்.இது முழுப் பொய்யான கருத்து. பல்வேறு வகைகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்கள் இருக்கிறார்கள். குற்றத்துக்கு உடந்தையானவர்கள் என்ற தத்துவத்தில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைக்க முடியும். 

  இதில் அரசியல், பொருளாதார மற்றும் பல வகையில் குற்றவாளிகளாக இனம் காணலாம். அத்துடன் புலிகளுக்கு அரசியல் ஆலோசகர்களாக பணியாற்றியவர்களையும் குற்றவாளிகளாக்கலாம். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு வீடு, நிலம், நிதி மற்றும் வளங்களை வழங்கியவர்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம்.

  பல வகைகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாகக் காட்டிலிருந்து திருடப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட மேசையை வாங்கியவரும் குற்றவாளிதான். மூன்றாவது தேவை கலப்பு நீதிமன்றம் என்றால், முதலில், யார் போர் தொடுத்தவர்கள் எனக் கண்டறியவேண்டும். இலங்கைப் போரில் முதலில் போரை ஆரம்பித்தவர்கள் புலிகள் தான். இலங்கை அரசு அல்ல.விடுதலைப் புலிகள் சட்டவிரோத அமைப்பாகும். படையினர் சட்டபூர்வ அமைப்பாகும். எனவே இரண்டும் வேறுபட்டவை. இவை தொடர்பில் ஒன்றாகக் குற்றச்சாட்டை முன் வைக்க முடியாது என்றார்.

  படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்ற கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்பட்டது. எனினும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்வது எவ்வாறு? எனக் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, புனர்வாழ்வு வழங்கப்பட்டுச் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் உள்ளனர். 

  அவர்கள் நாட்டில் மக்களுக்கு எதிராகப் பல்வேறு குற்றங்களை இழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் நாம் 1982 ஆம் ஆண்டு முதல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், பொது மன்னிப்பு மீளப்பெறப்பட்டு அவர்கள் மீண்டும் கைது செய்யப்படவேண்டும் . 

  மேலும் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட குற்றங்கள். புலிகளுக்கு உதவிவழங்கிய வெளிநாட்டுக் கட்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல் வழங்கிய நிறுவனங்கள் எனப் பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க முடியும். அத்துடன் புலிகளின் எழுச்சியினால் 60 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  எனவே நாம் குற்றங்களைக் கண்டறிய முற்பட்டால் நாட்டின் மூன்றிலொரு பங்கினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும். இது ஒரு நடைமுறைத் தீர்வு அல்ல. சமரசம் செய்ய முடியாது. பின்னர் இந்ந விடயம் ஏராளமான பிரச்சினைகளை உருவாக்கும். நாம் மட்டும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற கோணத்தில் பார்க்க முடியாது. 

  சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டார்கள். சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள். இதில் ஒரு சில நிலங்கள் மட்டுமே மீள வழங்கப்பட்டன.இராணுவத்தினர் தமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள் எனத் தமிழ் மக்கள் பெரியளவில் அழுது பெரிய சாயல் செய்தாலும், புலிகள் சிங்கள மற்றும்முஸ்லிம்க்களுடைய பலவற்றை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆனால் இவற்றை யாரும் முரண்பாடாகக் கருதுவதுமில்லை மற்றும் அந்த நிலங்களை மீள வழங்கப்பட்டன். 

  இராணுவத்தினர் தமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள் எனத் தமிழ் மக்கள் பெரியளவில் அழுது பெரிய சாயல் செய்தாலும், புலிகள் சிங்கள மற்றும்முஸ்லிம்க்களுடைய பலவற்றை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆனால் இவற்றை யாரும் முரண்பாடாகக் கருதுவதுமில்லை மற்றும் அந்த நிலங்களை மீள வழங்க எவரும் முயற்சிக்கவுமில்லை. 

  எனவே, நாம் ஒரு சீரான முறையில் இந்த பிரச்சினைகளை கையாளவேண்டும். எனவே இனப் பாகுபாடு இன்றி அனைத்து குடிமக்களுக்கும் நன்மைளிக்கும் தீர்வை வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம்dஎன்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top