Breaking News

உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இருக்க முடியாது! ரணில்

இறுதி யுத்­தத்தின்போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வி­னையும் கருணை சபை­யையும் நிறு­வ­வுள்ளோம்.

இதன்­மூ­ல­மாக உள்­ளக பொறி­மு­றையை கட்­ட­மைத்து இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­த­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.உண்­மையை கண்­ட­றி­வ­தற்கு அனை­வரும் இணக்கம் தெர­வித்­துள்­ளனர். இதன்­பி­ர­காரம் யுத்­ததில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு கல­தாரி ஹொட்­டலில் நேற்று நடை­பெற்ற தேசிய முகா­மைத்­துவ கருத்­த­ரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். இந்த ஒற்­று­மை­யி­னூ­டாக நல்­லாட்­சியின் பிர­தி­ப­லனை மக்­க­ளினால் அடைந்து கொள்ள முடியும்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை கட்­ட­மைக்­க­வுள்ளோம். இதே­வேளை பல­மான பாரா­ளு­மன்றத்தை கட்­ட­மைக்க வேண்­டி­யுள்­ளது. முன்­னைய பாரா­ளு­மன்­றத்தின் செயற்­பா­டுகள் போதி­ய­ளவு பல­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது நல்­லாட்சி வேலைத்­திட்­டத்தில் பல­மான பாரா­ளு­மன்­றத்தை நாம் கட்­ட­மைக்­க­வுள்ளோம்.

நாட்­டிற்கு தேவை­யான சட்­டத்­திட்­டங்­களை நாம் கொண்­டு­வ­ர­வுள்ளோம். வரவு செலவு திட்ட தயா­ரிப்பின் பிர­தான காரி­யாலம் பாரா­ளு­மன்­ற­மாகும். இத­னூ­டா­கவே நாட்டு மக்­களின் பொரு­ளா­தாரம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. நாட்டு பொரு­ளா­தாரம், அர­சியல் தொடர்பில் வாத பிர­தி­வா­தங்கள் நடத்­தப்­பட வேண்டும்.

ஜன­நா­ய­கத்தின் பிர­தான அம்­ச­மான நல்­லாட்­சியை பூர­ண­மாக ஏற்­ப­டுத்த முடி­யாது. எவ்­வா­றா­யினும் அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நாம் ஆரம்­பிக்க வேண்டும்.
நாட்டில் வடக்கு தெற்கு இடையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக அதி­கார பர­வ­லாக்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

இதே­வேளை புதிய தேர்தல் முைறைமை மற்றும் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு அனைத்து கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இதற்­க­மைய நாட்டில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாயின் உண்­மையை கண்­ட­றிந்து மக்கள் மத்­தி­யி­லுள்ள சந்­தே­கங்­களை முழு­மை­யாக தீர்க்க வேண்டும்.

இறுதி யுத்­ததின் போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வினை நிறு­வ­வுள்ளோம். முன்பு உரு­வாக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுக்­களை விடவும் இதன் செயற்­பா­டுகள் பாரிய மாற்­றங்­களை கொண்­ட­தாக காணப்­படும். அத்­தோடு பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ மத தலை­வர்­களை உள்­ள­டக்­கிய கருணை சபை­யொன்­றையும் நாம் நிறுவ திட்­ட­மிட்­டுள்ளோம்.உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு கருனை சபை என்­ப­வற்றின் ஊடாக உள்­ளக பொறி­மு­றையை கட்­ட­மைத்து நாட்டின் இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே எமது பிர­தான இலக்­காக உள்­ளது.

சர்­வ­தே­சத்தின் பரிந்­து­ரையின் பிர­காரம் உள்­ளக விசா­ர­ணைக்கு சர்வதேச பிர­தி­நி­தி­களை உட்­சேர்ப்­ப­தற்கு முடி­யாது. அதற்கு எமது அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தில் இட­மில்லை. இதனை அதி­கா­ர­மிக்க பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக முன்­னெ­டுக்க வேண்டும்.

எனவே நல்­லாட்சி ஏற்­ப­டுத்­து­வது தேசிய அர­சாங்­கத்­திற்கு பாரிய சவா­லாக அமையும். அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும். நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டும். இதுவே எமக்குள்ள சவாலாகும்.

முன்னைய ஆட்சியில் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு இழைக்கப்பட்ட அநீதி தற்போதைய நிலவரங்களின் போது முழுமையாக மாறியுள்ளது. தற்போது நீதிதுறையை நாம் வலுவானதாக மாற்றியுள்ளோம். இதற்கமைய உள்ளக பொறிமுறையையும் பலமானதாக மாற்றுவோம்.பலமான நீதிதுறை நாம் கட்டியெழுப்பினால் மாத்திரமே நல்லாட்சியை உறுதிப்படுத்த முடியும். என்றார்.